search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்கள்"

    • வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.
    • சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நேற்று அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தததால் சொந்த ஊர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு சென்றனர்.

    சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கின. தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கியது.

    இந்த நிலையில் ஓட்டு போட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக கூடுதலாக பஸ் வசதியை அரசு போக்குவரத்து கழகங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் செய்துள்ளது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சனி, ஞாயிறு தொடர் விடுமுறை கிடைப்பதால் 22-ந்தேதி (திங்கட்கிழமை) வேலைக்கு செல்ல வசதியாக பெரும்பாலும் நாளை பயணத்தை தொடர்வார்கள்.

    அதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், ஓசூர், திருப்பூர், சிதம்பரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.

    தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் விடப்பட்டு உள்ளது. இந்த ரெயில் தூத்துக்குடியில் இன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு நாளை அதிகாலை 3.50 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் 4.45 மணிக்கு சென்ட்ரல் நிலையம் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாதவை. இந்த ரெயில் மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.

    மற்றொரு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து எழும்பூருக்கு இன்று இயக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயில் பகல் 1.20 மணிக்கு எழும்பூர் வந்து சேர்ந்தது.

    இதே போல் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து நாளை பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கூறும்போது நாளை (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்ய 34 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. பொதுமக்கள் நெரிசலை தவிர்க்க அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றார்.

    • 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரெயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌
    • விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் வழியாக கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி தாம்பரம்-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (06001) ஏப்ரல் 18 மற்றும் 20-ந்தேதி ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி-தாம்பரம் சிறப்பு ரெயில் (06002) ஏப்ரல் 19 மற்றும் 21-ந்தேதி ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 19 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரெயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

    சென்னை எழும்பூர்-கோயம்புத்தூர் சிறப்பு ரெயில் (06003) சென்னையில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (06004) ஏப்ரல் 19 மற்றும் 21 ஆகிய நாட்களில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

    இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரெயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும்.
    • கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும்.

    கோவை:

    கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதி மக்கள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் வழியாக சிறப்பு ரெயில் ஒன்றும், சென்னை வழியாக மற்றொரு சிறப்பு ரெயிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் வருகிற 31-ந்தேதி அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

    அதேபோல் ரெயில் 06049 ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும். அந்தவகையில் கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும். சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    ரெயில் எண் 06043 தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 31-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 1.57 மணிக்கு வந்து 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

    06044 கொச்சுவேலி- தாம்பரம் சிறப்பு ரெயில் கொச்சுவேலியில் இருந்து 1-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்து 12.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய இடங்களில் நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்செந்தூர் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் முருக பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • ரெயில்களை நேரடியாக திருச்செந்தூருக்கு நீட்டிக்க வேண்டும்.

    தென்காசி:

    செங்கோட்டை-நெல்லை வழித்தடமானது 1904-ல் மீட்டர் கேஜ் ஆக தொடங்கப்பட்டு 2012-ல் அகல பாதையாக மாற்றப்பட்டு 16 ரெயில் நிலையங்களுடன் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

    விரைவில் இயங்க இருக்கும் ஈரோடு-செங்கோட்டை ரெயிலையும் சேர்த்து தற்போது 6 தினசரி ரெயில்களும் ஒரு வாரம் மும்முறை ரெயில், ஒரு வாராந்திர ரெயில் உட்பட 8 ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    அதைப்போல 60 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெல்லை-திருச்செந்தூர் வழித்தடமானது 1923-ம் ஆண்டு மீட்டர் கேஜ் வழித்தடமாக தொடங்கப்பட்டு 2009-ல் அகலப்பாதையாக மாற்றப்பட்டு 10 ரெயில் நிலையங்களுடன் தற்போது செயல்பாட்டில் உள்ளது. செந்தூர் எக்ஸ்பிரஸ் உட்பட மொத்தம் 7 தினசரி ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    இந்த இரு வழித்தடங்களிலும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார என்ஜின் கொண்டு தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. செங்கோட்டை-நெல்லை-திருச்செந்தூர் ரெயில் வழிதடங்கள் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருந்தாலும் இதுவரை நேரடி ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் செங்கோட்டை-நெல்லை திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்க வேண்டும் என்பது முருக பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மற்றும் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் ரெயில்களை நேரடியாக திருச்செந்தூருக்கு நீட்டிக்க வேண்டும்.


    அதைப்போல திருச்செந்தூரில் இருந்து காலை 7.20 மற்றும் மதியம் 4.25-க்கு புறப்பட்டு நெல்லை செல்லும் ரெயிலை நேரடியாக செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும். இவ்வாறு இணைப்பதால் ரெயில் இயக்கத்தில் எந்த இடையூறும் இருக்காது. மேலும் தென்காசி மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட முருக பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.

    தற்போது திருச்செந்தூர் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் முருக பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் திப்பணம்பட்டியை சேர்ந்த முருக பக்தர் வேல்முருகன் கூறியதாவது:-

    சூரசம்ஹாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசி பெருந்திருவிழா உள்ளிட்டவை திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும் விழாக்கள் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முருக பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    தென்காசி மாவட்டத்தில் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூர் சென்று வருகிறோம். செங்கோட்டை-திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே கூடுதல் பெட்டிகள் இணைத்து செங்கோட்டை-திருச்செந்தூர் இடையே நேரடி ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு 15 மற்றும் 17-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு 12, 14, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்களுக்காக சிறப்பு ரெயில்கள் ஏற்கனவே விடப்பட்டன.

    தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் கணிசமாக உயர்ந்தது. இதனால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது.

    கூட்ட நெரிசலை குறைக்க மேலும் 2 சிறப்பு ரெயில்கள் இன்று அறிவிக்கப்பட்டன. தாம்பரம்-தூத்துக்குடிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலும், தாம்பரம்-திருநெல்வேலிக்கு முன்பதிவு சிறப்பு ரெயிலும் விடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் நேரத்தில் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த ரெயில் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி செல்கிறது. இதேபோல 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)யும் மற்றொரு சிறப்பு ரெயில் தூத்துக்குடிக்கு விடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு 15 மற்றும் 17-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தூத்துக்குடியில் காலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

    சிறப்பு ரெயிலில் 2-ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2, 2-ம் வகுப்பு பெட்டிகள் 2 என மொத்தம் 22 பெட்டிகள் இடம்பெற்று உள்ளன.


    இதேபோல தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு நாளை (11-ந்தேதி) 13, 16-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இரவு 9.50 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த முன்பதிவு சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு 12, 14, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

    இந்த ரெயிலில் 3-ம் வகுப்பு ஏ.சி. படுக்கை வசதி-3 பெட்டிகள், ஏ.சி. 3 அடுக்கு படுக்கை எக்னாமிக் பெட்டிகள்-9, 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி-2, 2-ம் வகுப்பு பொது பெட்டி-2 உள்ளன.

    இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழ கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி, சேரன்மாதேவி வழியாக திருநெல்வேலி சென்றடைகிறது.

    அதேபோல நெல்லையில் இருந்தும் இதே வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குக நேசன் தெரிவித்துள்ளார்.

    • திறப்பு விழா முடிந்த பிறகு பொதுமக்கள் ராமரை தரிசிப்பதற்கான ஏற்பாட்டை பா.ஜ.க. செய்கிறது.
    • வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கம்-2 நிகழ்ச்சிக்கும், தமிழ் நாட்டில் இருந்து மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

    கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கருதியும் நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்கள் இவ்விழாவுக்கு வர வேண்டாம் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதனால், திறப்பு விழா முடிந்த பிறகு பொதுமக்கள் ராமரை தரிசிப்பதற்கான ஏற்பாட்டை பா.ஜ.க. செய்கிறது. இந்த இலவச ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் பீகார் மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், நாடு முழுவதிலும் இருந்து 5 கோடி பேர் அயோத்தி ராமர் கோவிலில் இலவசமாக தரிசனம் செய்ய பா.ஜ.க. ஏற்பாடு செய்து உள்ளது. இதற்காக, 'ராம் தர்ஷன் அபியான்' எனும் பெயரில் ஜனவரி 24-ல் தொடங்கும் ஆன்மிக யாத்திரை மார்ச் 24 வரை நடைபெற உள்ளது.

    இதற்காக, ரெயில்வே துறையில் நாடு முழுவதிலும் இருந்து 275 சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதில், உணவு உள்ளிட்ட சகல வசதிகளுடன் 5 கோடி பேரும் இலவசமாக பயணம் செய்யலாம். இதன் மூலம், ராமர் தரிசனத்துடன், அயோத்தியின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றி நாட்டு மக்களை அறிய வைப்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம்.

    வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கம்-2 நிகழ்ச்சிக்கும், தமிழ் நாட்டில் இருந்து மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பயணம், தங்குதல், உணவு என அனைத்து வசதிகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் செய்தது போல், அயோத்தி பயண ஏற்பாட்டை பா.ஜ.க. செய்ய உள்ளது.

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக உ.பி. அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இவ்விழா, இந்திய வரலாற்றில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக அமையும் வகையில் மிகமிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    • வாரணாசியில், கலாசார நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது பதிப்பு வருகின்ற 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • தெற்கு ரெயில்வே சென்னை சென்டிரல், கன்னியாகுமாரி, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வாரணாசிக்கு 7 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது.

    சென்னை:

    புனித நகரமான வாரணாசியில், கலாசார நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாவது பதிப்பு வருகின்ற 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தென்னிந்தியாவில் உள்ள மக்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.

    இதனால் மக்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சென்னை சென்டிரல், கன்னியாகுமாரி, கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வாரணாசிக்கு 7 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 15, 23, 27-ந்தேதிகளில் காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (வண்டி எண்.06101), (06109), (06113) அடுத்த 3-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசியை சென்றடையும். மறுமார்க்கமாக வாரணாசியில் இருந்து டிசம்பர் 20, 28-ந் தேதி மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06102), (06110), (06114) அடுத்த 3-வது நாள் மாலை 4.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

    இதேபோல, கன்னியாகுமரியில் இருந்து டிசம்பர் 16, 20-ந் தேதிகளில் இரவு 8.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06103), (06107) அடுத்த 4-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசியை சென்றடையும். மறுமார்க்கமாக வாரணாசியில் இருந்து டிசம்பர் 22, 26-ந் தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06104), (06108) அடுத்த 4-வது நாள் காலை 11.50 மணிக்கு கன்னியாகுமரியை வந்தடையும்.

    இதேபோல, கோவையில் இருந்து டிசம்பர் 19, 25-ந்தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06105), (06111) அடுத்த 3-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசியை சென்றடையும். மறுமார்க்கமாக வாரணாசியில் இருந்து டிசம்பர் 24, 30-ந்தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்கள் (06106), (06112) அடுத்த 4-வது நாள் அதிகாலை 2.30 மணிக்கு கோவையை வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலக்காடு-சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுவதும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
    • மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரெயில் 10-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வெள்ள பாதிப்புக்கு பிறகு மின்சார ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று முதல் சீரானது. ஆனாலும் ஒரு சில ரெயில்கள் மாற்றுப்பாதை மற்றும் ரத்து செய்யப்பட்டும் உள்ளன. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 8 சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது. எண் 06061 தாம்பரம்-நாகர்கோவில், எண்.06044 தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரெயில், எண்.22652 பாலக்காடு-சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுவதும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல எண்.06062 நாகர்கோவில்-மங்களூரு சிறப்பு ரெயில், எண்.06055 மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரெயில் ஆகியவை நாளை (9-ந்தேதி) ரத்து செய்யப்பட்டு உள்ளது. எண்.06063 மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரெயில் 10-ந்தேதி முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • பாசஞ்சர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.
    • நாகூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் தகவல் மையம் அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா நிர்வாகம் சார்பில் திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட மேலாளர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகூர் ஆண்டவர் பெரிய கந்தூரி விழா வருகிற 14-ந்தேதி தொடங்கி புனித கொடி ஏற்றத்துடன் தொடங்கி

    27. 12. 2023 தேதி புதன்கிழமை புனித கொடி இறக்கத்துடன் நிறைவடைய உள்ளது.

    இதில் முக்கிய நிகழ்வாக 23-ம் தேதி சனிக்கிழமை இரவு புனித சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு 24 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரவுலாவஷரீபில் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஆகவே ரெயில் மூலம் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் நாகூர், திருச்சி, சென்னை, பெங்களூர், கொல்லம், ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கவும், காரைக்கால் - சென்னை, காரைக்கால் - எர்ணாகுளம், மன்னார்குடி - சென்னை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களும், நாகூர் வழியாக பெங்களூரு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் செல்லும் பாசஞ்சர் ரயில்களும் கூடுதலாக பெட்டி இணைக்க வேண்டும்.

    மேலும் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக அதிக அளவில்கழிவறை வசதி குடிநீர் வசதி ஏற்படுத்திடவும் நாகூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தகவல் மையம் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • செகந்திராபாத் சிறப்புரெயில் நாளை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள்இரவு கொல்லம் செல்லும்
    • நரசப்பூர் விரைவு ரெயில் நவம்பர்26-ந்தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை கோட்டயம் சென்றடையும்

    கோவை,

    சபரிமலை சீசனை யொட்டி கோவை, போத்த னூர் வழித்தடத்தில் கேரள மாநிலம் கொல்லம், கோட்டயம் பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க ப்படுவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை சீசனை யொட்டி நவம்பர் 24, டிசம்பர் 1 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் செகந்திராபாத் -கொல்லம் சிறப்பு விரைவு ரெயில் (எண் 07127) மறுநாள் இரவு 7.30மணிக்கு கொல்லம் நிலை மண்ட பத்தை சென்றடையும்.

    நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 2 ஆகிய சனிக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் கொல்லம் -செகந்திராபாத் சிறப்பு ரெயில் விரைவு எண் 07128 திங்கட்கிழ மைகளில் காலை 4.30 மணிக்கு செகந்திரா பாத்தை சென்றடையும்.இந்த ரெயிலானது, காயன்குளம், மாவேலிக்கரை, செங்க ன்னூர், திருவல்லா, சங்கன ச்சேரி, கோட்டயம், எர்ணா குளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பதி, ரேணிகுண்டா, தாடிபத்ரி, கூட்டி, ஸ்ரீ ராம்நகர், காச்சிக்குடா, உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    நவம்பர்26, டிசம்பர் 3 ஆகிய ஞாயிற்றுக்கிழ மைகளில் கர்நாடக மாநிலம், நரசப்பூரில் இருந்து மாலை 3.50 மணிக்குப் புறப்படும் நரசப்பூர் - கோட்டயம் விரைவு ரெயில் (எண் 07119) மறுநாள் மாலை 4.50 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். நவம்பர் 27, டிசம்பர் 4 ஆகிய திங்கட்கி ழமைகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் கோட்டயம் - நரசப்பூர் சிறப்பு விரைவு ரெயில் (எண் 07120) மறுநாள் இரவு 9 மணிக்கு நரசப்பூரை சென்றடையும்.

    இந்த ரெயிலானது எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலா ர்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணி குண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி,விஜயவாடா, பீமாவரம், டவுன் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

    நவம்பர் 27-ந் தேதி முதல் டிசம்பர் 31 ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை களில் சென்னை சென்ட்ர லில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் சென்னை - கோட்டயம் வாராந்திர சிறப்பு ரெயில் (எண் 06091) மறுநாள் பிற்பகல் 1.10 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.

    நவம்பர் 27 முதல் ஜனவரி 1-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் கோட்டயம் -சென்னை சிறப்பு வாராந்திர ரெயில் எண் (06092) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயிலானது எர்ணா குளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
    • சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 17-ந்தேதி நடை திறக்கப்பட்டது. விரதம் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்காக கோவிலில் குவிந்து வருகிறார்கள். சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந்தேதி நடக்கிறது.

    மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு இன்று முதல் 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    வாரத்தின் ஞாயிற்றுக்கிழமைகளான இன்று (19-ந்தேதி), வருகிற 26-ந்தேதி, டிசம்பர் 3-ந்தேதி, 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந் தேதி, 31-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்கள்(வண்டி எண்:06027) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் அரக்கோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், பாலக்காடு, திரிச்சூர் வழியாக மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது.

    இதுபோல் கோட்டயத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 20-ந்தேதி, 27-ந்தேதி, டிசம்பர் 4-ந்தேதி, 11-ந்தேதி, 18-ந் தேதி, 25-ந்தேதி, மற்றும் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1-ந்தேதிகளில் சிறப்பு ரெயில்(எண்:06028) இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை10.30 மணிக்கு வந்தடைகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

    இதேபோல் பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு வந்தே பாரத் ரெயில் (எண்:06031) நாளை (20-ந்தேதி) இயக்கப்படுகிறது. நாளை மாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காட்பாடியில் மட்டும் நின்று இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இதேபோல் பெங்களூரில் இருந்து மறுநாள் (21-ந்தேதி) இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரெயில் (எண்:06032) மறுநாள் (22-ந்தேதி) காலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.

    • கொரோனாவிற்கு முன்பு சில ஆண்டுகளாக வியாழக்கிழமை தோறும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நெல்லைக்கு சில சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.

    தென்காசி:

    வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அனைத்து தென்மாவட்ட ரெயில்களும் நிரம்பி வழிகிறது.

    தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரெயில்களான கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து ஒவ்வொரு ரெயிலிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை 300-க்கும் மேல் உள்ளது.

    இந்நிலையில், சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நெல்லைக்கு சில சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தென்காசிக்கு ஒரு சிறப்பு ரெயில் கூட இயக்கப்படாதது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லை - பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை கொண்டு கொரோனாவிற்கு முன்பு சில ஆண்டுகளாக வியாழக்கிழமை தோறும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

    தற்போது அதே காலிப்பெட்டிகளை கொண்டு தென்காசி வழியாக தீபாவளி சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அந்த ரெயிலை நெல்லையில் இருந்து நேர்வழியில் தற்போது சிறப்பு ரெயிலாக இயக்குவது வருத்தமளிக்கிறது.

    சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களின் நடைமேடைகளில் 17 பெட்டிகள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் 22 பெட்டிகள் கொண்ட பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை வைத்து தென்காசி வழியாக சிறப்பு ரெயில் இயக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே உடனடியாக இந்த 5 ரெயில் நிலையங்களில் நடைமேடைகளை நீட்டிப்பதோடு மட்டுமல்லாமல் தீபாவளி முடிந்து சென்னை செல்வதற்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×